ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் கதை
ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் கதை:6. காசியில் ஒரு நாள் சங்கரர் தன் சீடர்களுடன் விஸ்வநாதர், அன்னபூர்ணி கோயிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் வழியில், ஒரு புலையன் தன் கையில் 4 நாய்களை பிடித்தவாறே தன் மனைவி புலைச்சியுடன், அருவருக்கத்தக்க கோலத்தில் எதிரில் வர, அவர்களை கண்ட சங்கரரும் அவருடைய சிஷ்யர்களும், அவர்களை பார்த்து "விலகு விலகு" என்று கூறியவாறே "விலகிச்செல்ல" சொல்ல, அதற்கு அந்த புலையன், சங்கரரை பார்த்து, "விலகு! விலகு! என்று சொல்கிறீர்களே! எதை விலகச் சொல்கிறீர்கள்! இந்த உடலையா? அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் *ஆன்மாவையா?", எதை விலகிப்போகச் சொல்கிறீர்கள்?!", என்று அழுத்தம் திருத்தமாக எதிர் கேள்வி கேட்கவும், தக்ஷ்ணாமூர்த்தியின் அவதாரமான சங்கரருக்கு அக்கேள்வியில் பொதிந்திருக்கும் உள்ளர்த்தம் புரிந்ததால், கேள்வி கேட்டவர் "சாமானியர் அல்ல" என்று புரிந்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, "மனிஷா பஞ்சகம்" என்ற ஐந்து ஸ்லோகங்களை பாட, அக்கணமே அந்த புலையன் - காசி விஸ்வநாதராகவும், புலைச்சி - ஜகன்மாதா விசாலாட்சியாகவும், நான்கு நாய்கள் - ...